Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டி20 தொடரில் இருந்து விலகினார் டு பிளிஸ்சிஸ்..

On February 3, 2018
faf-du-plessis
Share
faf-du-plessis இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஒருநாள் போட்டியின்போது டு பிளிசிஸின் கை விரலில் அடிப்பட்டது. போட்டி முடிந்த பின்னர் பேசிய டு பிளிஸ்சிஸ் அடுத்த போட்டிக்குள் காயம் சரியாகிவிடும். எனவே அடுத்த போட்டியில் விளையாடுவேன் என கூறியிருந்தார். ஆனால் அந்த காயம் வீரியம் உடையதாக இருந்துள்ளது. இந்த காயம் முழுவதும் குணமடைய இன்னும் மூன்று முதல் ஆறு வாரங்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு எதிரான எஞ்சியுள்ள ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து டு பிளிஸ்சிஸ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பர்ஹான் பெகர்தீன் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கடைசி டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டி வில்லியர்ஸ் விலகியுள்ளார். அதோடு கூடுதல் விக்கெட் கீப்பராக ஹெயின்ரிச் கிலாகெனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.