Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிரைவர் கண்டக்டர்கள் வெறிச்செயல்: பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்...

On June 6, 2017
selam
Share
selam சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நார்ணம்பாளையத்திற்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடைசி டிரிப்பாக இரவு 9 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு நார்ணம்பாளையத்திற்கு 10 மணிக்கு சென்றடையும்.பின்னர் அங்கு நிறுத்தப்படும் அந்த பஸ் மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு சேலத்திற்கு வரும். வழக்கம் போல அந்த பஸ் நார்ணம்பாளையம் கிராமத்தில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் உடனே இறங்கி சென்றனர். இந்த நிலையில் பஸ் நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு பஸ்சில் இருந்து இறங்கி கதறியபடி 15 வயது சிறுமி ஒருவர் ஓடினார். இதை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது கதறி அழுத அந்த சிறுமி பஸ்சுக்குள் வைத்து தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் பஸ்சிற்குள் ஏறினர். அப்போது பஸ்சின் உள்ளே இருந்த 3 பேரையும் தர தரவென வெளியே இழுத்து வந்தனர். அடித்து உதைத்த அந்த பகுதி பொதுமக்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சிறுமி மற்றும் 3 பேரையும் மீட்டு ஒமலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பஸ்சில் இருந்தவர்கள் சேலம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (37), உடையாப்பட்டி அதிகாரிப்பட்டியை முருகன் (35), வாழப்பாடி முத்தம்பட்டியை சேர்ந்த பெருமாள் (22) என்பது தெரிய வந்தது. இதில் மணிவண்ணன், முருகன் ஆகியோர் அந்த பஸ்சில் நேற்று டிரைவராகவும், பெருமாள் கண்டக்டராகவும் பணி புரிந்ததும் தெரிய வந்தது. பஸ்சில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சேலத்தை சேர்ந்தவர். இவர் சேலம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த அந்த சிறுமிக்கும், பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் வீட்டில் பெற்றோர்களே காரணம் தான் பெற்ற பிள்ளைகள் வீட்டில் சண்டை போட்டுகொண்டு எங்கு செல்கின்றனர் என்று கவனிக்க வேண்டும் இல்லையென்றால் இவ்வாறான விபரிதங்கள் தான் நடக்கும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.