Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிராபிக் ராமசாமியாகிறார் நடிகர் விஜய்!

On July 22, 2017
sa
Share
sa டிராபிக் ராமசாமி, பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆசாமி. அவரது வாழ்க்கை வரலாறு படமாகிறது. படத்தை நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி தயாரிக்கவுள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பலமுகங்களை கொண்டவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘டூரிங்டாக்கீஸ்’ என்ற படத்தை இயக்கியவர் அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்கவில்லை. ஆனால், ‘நையப்புடை’ மற்றும் ‘கொடி’ ஆகிய படங்களில் நடித்தார். மறுபடியும் படம் இயக்குவதற்குத் தயாராகிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தமுறை அவர் கையில் எடுத்திருப்பது, சமூகப் பிரச்னைகளுக்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி வாழ்க்கையை. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி உள்ளன. இப்படத்தில் இளம்வயது டிராபிக் ராமசாமியாக சில காட்சிகளில் விஜய் நடிப்பார் என்றும், வயதான டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். traffic இதற்காக டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து ஆலோசித்துவிட்டு வந்ததாக கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.