Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிராகனை வென்ற காளை....

On August 8, 2017
kaalai-kar-1473901923-800
Share
kaalai-kar-1473901923-800 டி.என்.பி.எல்., தொடரின் 2வது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லையில் நேற்று நடந்த லீக் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி சார்பில் விஷால் 41 ரன்களும், பத்ரிநாத் 26 ரன்களும் எடுத்தனர். எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன் அணி, போராடிய போதும் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணி சார்பில் விவேக் 32 ரன்களும், கங்கா 27 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.