Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்

On October 28, 2020
Pasumpon
Share

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம்.

அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது.

பிரபலமான பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளராக பணியாற்றிய எம்.பி.ஆபிரகாம் லிங்கன் இந்த வரலாற்று படத்துக்கான வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். நீண்டகாலம் விளம்பர துறையில் கோலோச்சிவரும் 'பிக்பிரிண்ட் பிக்சர்ஸ்' கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது. முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 மணிக்கு "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்தின் டிரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு யுகபாரதி பாடல்கள் எழுத, விஜய் ஆன்டனி இசையமைத்திருக்கிறார். மோனிதா இப்படத்திற்கு தேவையான ஆவணங்களை சேகரித்திருக்கிறார்.

பத்திரிகையாளர் MP ஆபிரகாம் லிங்கன் இயக்கி 'பிக் பிரிண்ட்' கார்த்தி தயாரித்த தேசியதலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படமான "பசும்பொன் தேவர் வரலாறு" டிரைலரை, இயக்குனர் இமயம் பாரதிராஜா நாளை வெளியிடுகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.