Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிசம்பர் 31 அன்று வெளியாகும் பிரபல நடிகர் படத்தின் பர்ஸ்ட் லுக்

On December 29, 2019
Thalapathi 64
Share

தளபதி விஜயின் "64" திரைப்படத்தை 'XB பிலிம் கிரியேட்டர்ஸ்' நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்தப் படத்தை "மாநகரம்", "கைதி" ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "தளபதி 64" படத்தின் முதல் பார்வை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.