Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெ. பிறந்தநாளன்று ஆர்.கே.நகர் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்- முதல்வர்

On December 16, 2017
CAMPAIGN1
Share
CAMPAIGN1 அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பிரச்சாரம் செய்தனர். பிரசாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் பேசும் போது, scooter34 ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தேவைகளை நிறைவேற்றியவர் என்றும், தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோது இந்த தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்தநாளன்று பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும்' என்றும் முதல்வர் உறுதி அளித்தார். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.