ஜெயலலிதா மரணம் சந்தேக மரணமா? என்ன சொல்லப் போகிறது நீதிமன்றம்?

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. ஆளுநர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் முதன்மை பொறுப்பில் உள்ளவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடவேண்டும்.
அப்பல்லோ மருத்துவமனை அனைத்தையும் மூடி மறைத்து விட்டது. எனவே இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.
இந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சந்தேக மரண வழக்காக பதிவு செய்ய சென்னை காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.வேலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன் விசாரணைக்கு வந்தபோது வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் முடிவில் ஜெ.மரணம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்படுமா? என்பது தெரியவரும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅரசியலில் குதிக்கும் இன்னொரு பிக் பாஸ்!
