ஜெயலலிதாவை மார்ச்சுவரியில் தள்ளியது மத்திய மதவாதிகளின் சதி! -மன்சூர் அலிகான் பரபர அறிக்கை

முன்னாள் முதல்வர் அம்மா அவர்களை குற்றுயிரும் குலையுயிருமாக நினைவற்ற நிலையில் மருத்துவமனையில் கொண்டு சென்று மார்ச்சுவரியில் தள்ளப்பட்டு இன்றோடு ஒரு வருடமாகிறது, மத்திய மதவாதிகளின் திட்டமிட்ட சதியாட்டம்.
சரியாக கடந்த ஒரு வருடத்தில் பணச்செல்லாமை, ஜிஎஸ்டி, நீட், தினம் ஏறும் பெட்ரோலியம், காவேரி மேலாண்மை வாரியம் அமையவிடாத துரோகம், 400 விவசாயிகள் நீரின்றி, பயிர்வாட கையில் காசின்றி செத்த பரிதாபம், சிங்களவனின் தொடர் தமிழக மீனவத்தாக்குதலை கண்டுக்காமல் அவனுக்கு மேலும்,மேலும் கப்பல்,கப்பலாய் பொருளதவி அனுப்பி பாசம் பொழியும் தமிழர் விரோத இறையான்மை,.விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாது, அம்பானி,அதானிக்கு லட்சம்,லட்சம் கோடி சட்டதிருத்தம் செய்து வரிச்சலுகை, மாநில.அரசின்,மக்களின் அனைத்துஅடிப்படை உரிமைகளையும் குரங்கு அப்பம் பங்கு போட்டு தின்றதை போன்று பிடுங்கிக்கொண்டு, அ.தி மு.க.மந்திரிகளை ரெய்டுநடத்தி கோவணத்தை கையில் பிடித்துக்கொண்டு, அவர்களின் கூஜா தூக்கிகளாக நடாத்தி, ஆண்டாண்டு காலமாய் போராடிப்பெற்ற சமூகநீதியை சாகடித்து தமிழக மாணவர்களை காவு வாங்கும் மத்திய அரசு, கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் உண்ணதமான5000 ஆண்டுகள் சரித்திரத்தை மூடி மறைக்கும் நயவஞ்சகம்!
இனியும் பொறுக்கலாகாது என் தாய்த்திருநாட்டின் தமிழ்பெருங்குடிமக்களே! வாரீர் கிளர்ந்தெழுவீர், மாநிலத்தில் சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி, சாதியால் பிளவுபடாமல், நீ நீயாக இரு, அடுத்தவரை மதி தமிழை நேசி!
நமக்குள் பேதம் வேண்டாம், தமிழராய் உயர்வோம் இனி, உறுதி கொள்,தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும், வாரீர் தமிழ்ப்பேரரசு படைப்போம்!
பாரதநாடு பழந்தமிழர் நாடு! நாம் அதன் புதல்வர்! நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்,உடலே கோயில்,உள்ளமே தெய்வம்! தமிழரின்,வாழ்வே மனிதநேயமே நம் உயிர் மூச்சு! சோற்றால் அடித்த பிண்டங்களாய் வாழ்வதா வாழ்க்கை? நாற்றால் வாழவைத்த விவசாயிகளைவாழவைக்க வாரீர், படைப்போம் தமிழ்ப்பேரரசு!!
சண்டாளர்களில்லாத சட்டசபை அதிரடி அரசியல் உடனடித்தீர்வு! உண்மையான மக்களாட்சி! வாரீர் தலைமையேற்க, கருத்துச்சொல்ல, வியர்வை சிந்தாதுவெற்றி இல்லை,களம் காணாது தளம் இல்லை! அமைப்போம்! தமிழ்ப்பேரரசு!!! நடிப்புத் தொழிலாளி தமிழாகரன்" என்ற" மன்சூரலிகான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
