Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜூன் 9-ல் வெளியாகும் ஜீ.வி.பிரகாஷின் "செம" படத்தின் இசை...

On June 6, 2017
sema 2
Share
sema 2 இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் 'செம'. வள்ளிகாந்தின் நண்பர் ஒருவர் திருமணம் செய்வதற்காக சந்தித்த நகைச்சுவையான அனுபவங்களை கதையாக உருவாக்கி பாண்டிராஜிடம் கூற அவருக்கு மிகவும் பிடித்துவிடவே இப்படம் தொடங்கப்பட்டது. பசங்க புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார் பாண்டிராஜ். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். sema இந்நிலையில் 'செம' படத்தின் இசை வரும் ஜூன் 9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இது குறித்து ஜி.வி.பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், '' 'வெயில்', 'ஆடுகளம்', 'கொம்பன்' படங்களுக்குப் பிறகு என்னிடமிருந்து கிராமத்து இசையில் 'செம' ட்ராக் லிஸ்ட் இது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.