Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜூன் 23’ல் வெளிவருமா சிம்புவின் அஅஅ???

On June 7, 2017
Anbanavan-Asaradhavan-Adangadhavan-Movie-Poster
Share
Anbanavan-Asaradhavan-Adangadhavan-Movie-Poster சிலம்பரசன்(சிம்பு) நடித்து, ஆதிக் ரவிசந்தர் இயக்கத்தில் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் தற்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படம், “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்”. இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷிரியா சரண் மற்றும் தமன்னா நடித்து வருகின்றனர். இவர்களுடன் நீத்து சந்திரா, சனா கான், மகத், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு வைரமுத்து மற்றும் சிலம்பரசன் பாடல்கள் எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரு பாடல்கள் தவிர்த்து மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த இரு பாடல் காட்சிகளுக்கான செட் சென்னையில் போடப்பட்டுள்ளது. இந்த இரு பாடல்கள் காட்சியாகப்பட்டு இந்த மாதம் 23’ம் தேதி இப்படத்தை உலகெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட தேதியில் படம் வெளி வருமா என்பதில் தற்போது சந்தேகம் எழுகிறது. காரணம் என்ன என்று விசாரித்து பார்த்ததில் எப்போதும் போல் நம்ம சிம்பு தான் காரணம் என படக்குழு வட்டாரத்தில் புகைகிறது. “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தில் மீதம் இருக்கும் இரு பாடல்கள் காட்சியாகப்பட உள்ள நிலையில், சிம்பு எப்போதும் போல் படபிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லையாம். நேரம் தவறி வருவாரா என்று பார்த்தால், ஷூட்டிங்குக்கு மட்டம் போட்டு விடுகிறாராம் நம்ம சிம்பு. அப்படியும் நேரம் தவிர்த்து வந்து விட்டால், ஒரு சில காட்சிகள் நடித்து விட்டு தனக்கு நடிப்பதற்கு மூட் இல்லை என்று படப்பிடிப்பு தளத்திலிருந்து எஸ்கேப் ஆகிறாராம் சிம்பு. எப்போது தான் சிம்புக்கு மூட் வரும் என்று யோசித்து கொண்டிருந்த படக்குழுவினருக்கு திடீரென்று அதிர்ச்சி. என்னடா என பார்த்தால்! இரு தினங்களுக்கு முன்பு, கிண்டி ரேஸ் கோர்ஸில் போடப்பட்டிருந்த படப்பிடிப்பு செட்டுக்கு சிம்பு வந்தாராம். எப்போதும் போல் நேரத்தை வீண் அடிப்பார் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு பெருத்த ஷாக். படப்பிடிப்புக்கு வந்த சிம்பு சுமார் பன்னிரண்டு மணி நேரம் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு பாடலை முடித்து கொடுத்து விட்டு சென்றுள்ளார் சிம்பு. இன்னும் ஒரு பாடல் காட்சியாக்கப்பட உள்ளது. அந்த பாடலின் படப்பிடிப்புக்கு சிம்புக்கு எப்போது மூட் வரும் என்று படப்பிடிப்பு குழுவினர் கண்களை பிதுக்கி காத்து கொண்டிருக்கின்றனர். சிம்புவின் இந்த பொறுப்பின்மையை பார்த்து படக்குழுவினர், இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்ற பெருத்த சந்தேகத்துடனே இருக்கின்றனர். ஒரு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் சிம்பு இவ்வாறு டார்ச்சர் கொடுத்தால், தயாரிப்பாளரும், இயக்குனரும் எப்பிடி ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியும்??? கொஞ்சம் பொறுப்போடு இருங்க சிம்பு!!!

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.