Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜீவனாம்சம் தர மறுத்த கணவர்... கொடுக்க வைத்த நீதிமன்றம்!

On August 15, 2017
Sistema-penal
Share
Sistema-penal டில்லியை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பெண்ணின் கணவர் முறையீடு செய்தார். 'அந்த பெண், 2006ல், வழக்கறிஞராக பதிவு செய்தவர், தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்' என, மனுவில், கணவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, தீபக் கார்க் பிறப்பித்த உத்தரவு:- கணவர் வீட்டில் வசிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணுக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த பெண்ணின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு இருந்தாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குடும்ப வன்முறை வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும். என நீதிபதி, தீபக் கார்க் உத்தரவு விட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.