Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜியோ,ஏர்டெல் போலவே இப்பொழுது குறைந்த விலையில் அன்லிமிட்டெட் வழங்கும் பி.எஸ்.என்.எல் !

On May 16, 2018
BSNL
Share

பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று அடிக்கடி சலுகைகளை வழங்காமல் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவனிக்கிறது. அந்த வகையில் தற்போது ரூ.118-க்கு அனிலிமிடெட் சேவையை பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன. 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், பிஎஸ்என்எல் சார்பில் டியூன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த டியூன்களை மாற்றும் போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் ரூ.93-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஐடியா ரூ.109-க்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.