ஜல்லிக்கட்டுக்கு ஓகே... அவசர சட்டம் பிரகடனம்....

தமிழகத்தில் இளைஞர்களின் தொடர் போராட்டத்தினால் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார்.
மத்திய அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அவரச் சட்டத்துக்கு, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவசரச் சட்டம் தற்போது அவசர சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் தலைமையிலான தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம், ஜல்லிக்கட்டுக்கு இதுவரை இருந்த தடை நீங்கியுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க ஏற்பாடு செயப்பட்டுவருவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
