கொலையுதிர் காலம் படம் ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. ஜனவரி மாதம் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களும் ரிலீஸாகின்றன. நயன்தாராவுக்கும் ஹீரோக்களுக்கு இணையான மார்க்கெட் இருப்பதால் படத்திற்கு என்று வசூல் நிச்சயம் வரும்.
ஜனவரி மாதம் நயன்தாரா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட். அதாவது விஸ்வாசம், கொலையுதிர்காலம் என்று அடுத்தடுத்து இரண்டு நயன் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் "கொலையுதிர் காலம்" - செகண்ட் லுக் இதோ..!

கொலையுதிர் காலம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஃபர்ஸ்ட் லுக்கே மாஸாக இருந்தது. இந்நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நயன்தாரா மூன்று வித முகபாவனைகள் கொடுத்திருப்பது போன்ற செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்தாலே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. செகண்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் #KolaiyuthirKaalam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
