சேலத்தில் சர்கார் பேனர்கள் கிழித்து அதிமுகவினர் போராட்டம்..!

மறு தணிக்கை செய்யப்படும் நிலையிலும், சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கிறது. சேலத்தில் சர்கார் பட பேனர்களை அடித்து, உதைத்து, கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சேலத்திலுள்ள ஏ.ஆர்.எஸ் திரையரங்கிற்குள் நுழைந்த அதிமுகவினர் அங்கு வைத்திருந்த சர்கார் திரைப்பட பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசிகர்களின் பேனர்களை கிழித்து, காலில் போட்டு மிதித்தனர்.
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க பட குழு முன் வந்துள்ளது. மறு தணிக்கை பணிகள் காலை 11.30 மணிக்கு துவங்கின. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கூட, படக்குழுவினர் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து இன்று காலை பேட்டியளித்தார். ஆனால், சேலத்தில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள், மறு தணிக்கை செய்யப்பட்டாலும், சர்கார் படத்தை திரையிட கூடாது என்று கூறி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post"பில்லா பாண்டி" விமர்சனம்..!
