Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செய்தியாளர்கள் தாக்கப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர்!.

On March 22, 2017
shankar
Share
shankar சென்னையில் நடந்த 2.ஓ படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், ஷங்கரின் உதவி இயக்குனரும், அவரது உறவினருமான பப்புவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசும்போது, என்னுடைய படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன். இருப்பினும், இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. இந்த விஷயம் என்னுடைய கவனத்துக்கு வராமல் நடந்துள்ளது. இனிமேல் இதுபோல் நடக்கவிடாமல் பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு என்று கூறினார் .இதையடுத்து, 2.ஓ படக்குழுவினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பாக பத்திரிகையாளர்கள் ஒன்றுகூடி அறிவித்தனர். செய்தியாளர்கள் தாக்கப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.