உங்கள் வீட்டுக்குள் பாஜக செயற்குழு கூட்டம்!

பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் துவங்குகிறது. இன்றும், நாளையும் நடக்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, அனைத்து மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் இக்கூட்டத்தில் பா.ஜ.கவின் அனைத்து 1400 எம்.எல்.ஏ.,க்கள், 337 எம்.பி.,க்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஏறக்குறைய 2500 க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்குழு கூட்டத்தின் நிறைவு நாளான நாளை, பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். மோடியின் இந்த உரை அனைத்து மாநிலங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த செயற்குழுவில் வரவிருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்கள், நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
