Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செம ஸ்டைலிஷ் "பேட்ட" ரஜினி - வெளியான புகைப்படம் இதோ..!

On December 24, 2018
DvF3_R8U0AA_1FS
Share
பேட்ட படத்தில் ரஜினியும், சிம்ரனும் ஜோடியாக நடந்து வரும் அழகான புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரஜினியின் பேட்ட படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் டீசரும் வைரல் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் 2019 புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பேட்ட படத்தில் ரஜினி - சிம்ரன் இருவரும் நடந்து வரும் புகைப்படத்தை வெளியிட்டு பேட்ட படத்தில் இடம்பெற்ற தனக்கு மிகவும் பிடித்த ஷாட் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினி செம ஸ்டைலாக இருக்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.