Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செம்மரக் கடத்தல் 31 தமிழர்கள் கைது!

On August 7, 2017
katappa
Share
katappa தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு மரம் வெட்டச் செல்லும் கூலித் தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். அவ்வகையில், இன்று ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் 31 தமிழர்களை செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடப்பா பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால், கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. செம்மரக் கடத்தல் கும்பல்கள் அதிக கூலி கொடுப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களை ஆசை காட்டி அழைத்துச் சென்று பலிகடா ஆக்குகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.