Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை 28 இயக்குனரின் அடுத்த படைப்பு ஆர்.கே.நகர்...

On May 29, 2017
rknagar_3169298f
Share
rknagar_3169298f இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 28 பாகம்2 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்கவிருக்கும் படம் ஆர்.கே.நகர்.இப்படத்தை புதியதாக ஆரம்பித்துள்ள ப்ளக் டிக்கெட் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளர். மேலும் வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவாகவுள்ள 2வது படத்தை இயக்கவுள்ளார் சரவணராஜன். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் 'வடகறி' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஆர்.கே.நகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் நாயகனாக வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக சனா, வில்லனாக சம்பந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பெரும் சர்ச்சையானது. பணப்பட்டுவாடா உறுதியானதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தற்போது 'ஆர்.கே.நகர்' என்று தனது தயாரிப்புக்கு வெங்கட்பிரபு பெயரிட்டுள்ளதால், படக்குழுவினருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.