Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னையில் 28ஆயிரத்தை தாண்டிய கொரோனா : மண்டல வாரியாக என்ன நிலவரம்?

On June 13, 2020
corona
Share

நேற்று தமிழகத்தில் 1,972 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000 பேர்களுக்கு கொரோனா தாக்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1972 பேர்களில் 1477 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,924 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,821 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,781, தேனாம்பேட்டையில் 3,464, கோடம்பாக்கத்தில் 3,108, அண்ணா நகரில் 2,781, திரு.வி.க நகரில் 2,660, அடையாறில் 1,607, வளசரவாக்கத்தில் 1,266. திருவொற்றியூரில் 1,072 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.