Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து "பீலா ராஜேஷ்" மாற்றம்..

On June 12, 2020
5dd91e3d1d05e56ef289fa99b374836e
Share

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிய சூழலில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் ஏற்கனவே இருந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2012 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார் என்பது மட்டுமின்றி தற்போது கொரோனா சிறப்பு அதிகாரியாக உள்ளார்.

எனவே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தற்போதைய காலகட்டத்திற்கு இவர் தான் சரியான நபர் என்று தமிழக அரசு முடிவு செய்து அவருக்கு இந்த பதவியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.