சீன நிறுவனத்தின் அசத்தல் ரூ.3,999 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லீபோன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லீபோன் W2 என அழைக்கப்படும் புதிய சாதனம் பேசிக் ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் ரூ.3,999 விலையில் விற்பனை செய்யப்படும் லீபோன் W2 வோல்ட்இ வசதியை கொண்டுள்ளது.
புதிய லீபோன் W2 மலிவு விலையில் புதிய சிறப்பம்சங்கள் அனைத்தையும் வழங்குகிறது. பிளாக், கோல்டென், ரோஸ் கோல்டு மற்றும் வைட்+கோல்டு என மொத்தம் நான்கு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
லீபோன் W2 சிறப்பம்சங்கள்:
* 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
* 1 ஜிபி ரேம்
* 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* விஜிஏ முன்பக்க கேமரா
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
லீபோன் W2 ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யுஎஸ்பி, வைபை, ஜி.பி.எஸ்., ஏ-ஜி.பி.எஸ்., போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கேமிங் அனுபவத்தை சீராக வழங்கும் G-சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் தமிழ் உள்பட மொத்தம் 22 இந்திய மொழிகளில் இயக்கும் வசதியும் கொண்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
