சீனா அத்துமீறல் விவகாரம் சுஷ்மா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!!

இந்திய - சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளை, தங்களுடையது என்று கூறி, சிலவற்றின் பெயர்களையும் மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது சீனா
இதற்கிடையில் இந்தியா - சீனா - பூட்டான் நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணிகளை இந்தியா தடுத்தது நிறுத்தியது.
ஆத்திரம் அடைந்த சீனா இந்தியாவின் 2 பதுங்கு குழிகளை அழித்தது. மேலும் டோக்லா பகுதியில் கூடாரம் அமைத்து இந்திய இராணுவத்தை தாக்கியுள்ளது. அதனால் இந்திய சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவும் என 3000 இராணுவ வீரர்களை குவித்துள்ளது.
இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது.இந்த கூட்டத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமை வகிப்பார் என கூறப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
