சிவகார்த்திகேயனுடன் இணையும் ராகுல் ப்ரீத் சிங் !

"'சீமராஜா" படத்தைத் தொடர்ந்து "இன்று நேற்று நாளை" பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
சயின்ஸ் கதைக்களம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் தமிழ் திரையுலக ஸ்ட்ரைக் முடிந்ததும் ஷூட்டிங் வேலைகள் துவங்க இருக்கின்றன.
இந்த நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ரகுல் பிரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் பட வேலைகள் துவங்காமல் உள்ளது.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
