சிவகார்த்திகேயனுக்கு வில்லியாகும் சிம்ரன்...

தமிழ் சினிமாவில் 1990 களில் நம்பர் ஒன் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரசாந்த், விஜயகாந்த், சரத்குமார் என பல ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். மார்க்கெட் லெவல் மிக உயரத்தில் இருந்த போதே திருமணத்தை முடித்து கொண்டார்.
பின் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் குறைந்து போனது. தற்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ‘ரஜினிமுருகன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் நடிக்கவிருக்கிறார். மேலும், நெப்போலியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சிம்ரனுக்கு வில்லன் வேடம் என சொல்லப்படுகிறது.
இது பற்றி பேசியுள்ள சிம்ரன், ஆக்டிவ்வான ஒரு இளம் டீமுடம் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு என்ன கேரக்டர் என்பதை சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு பவர்ஃபுல் ரோல். இதுவரை இல்லாத மாதிரி ஒரு புதுமையான சிம்ரனை நீங்கள் சந்திக்கலாம் என கூறியிருக்கிறார்.
இவர் ஏற்கனவே சுந்தர் C யுடன் ஐந்தாம்படை எனும் படத்தில் வில்லி போல் நடித்தது குறிப்பிடத்தக்கது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postமாணவ, மாணவிகளுக்கு இலவச வைஃபை தேவையா...
