சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு !

சிவகார்த்திகேயன் நடிப்பில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "சீமராஜா" படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது.
இந்த படத்தை அடுத்து இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் ஒரு படத்தை முதன்முதலாக தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் மே 15-ந் தேதியான நாளை வெளியாக உள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
