Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிறுமி பலாத்காரம் செய்து எரித்து கொலை : அசாமில் அதிர்ச்சி !

On March 24, 2018
girl
Share

அசாமில் 5வது படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்த மூன்று சிறுவர்கள், மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமின் நகோவான் மாவட்டத்தில் நேற்று(மார்ச் 23)நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அந்த சிறுமிக்கு தெரிந்தவர்கள் தான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி, தன்னை பலாத்காரம் செய்த, 3 பேரும், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். தீ வைக்கப்பட்டதில் 90 சதவீத காயங்கள் ஏற்பட்டதால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகள் 3 பேரும் மைனர்கள் என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்:-

சிறுமியிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளோம். அவர் கூறிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.