சிறுமியை காதலித்து ஏமாற்றி கடத்திச் சென்ற இளைஞர் கைது!

வேலூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் தனது மகளை கடத்திச் சென்றதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
புகார் அளிக்கப்பட்ட சில நாட்களில் அந்த சிறுமி தனது வீட்டிற்கு திரும்பினார். அந்த சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமி சாமுவேலை காதலிப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. ஆனாலும் அந்த சிறுமி மைனர் என்பதால், சாமுவேல் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சாமுவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
