Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல யூ ட்யூபர் கைது

On September 27, 2024
WhatsApp Image 2024-09-27 at 23.13.13
Share

புதுச்சேரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னர், நாளடைவில் இருவரும் பேசி நட்பாக பழகி வந்துள்ளனர். அவர்கள் பழகிய 15 நாட்களுக்குள் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார் அந்த இளைஞர்.

பின்பு, ஆபாச வீடியோக்கள் மற்றும் அவரது அந்தரங்க வீடியோக்களை அனுப்பியுள்ளார். பின்னர், சிறுமியையும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றுமாறு மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, இன்ஸ்டாவில் அந்தரங்க வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது மதுரைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தின் ஷா – சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் திருச்சி சூர்யா அவருடைய சித்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மதுரையில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை கைது செய்த போலீசார், புதுச்சேரி கொண்டு வந்தனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்ததில், பல்வேறு பெண்களுக்கு இதுபோன்று அஷ்ரப் அலி ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அஷ்ரப் அலியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைபர் கிரைம் போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.