சாய் பல்லவியின் முதல் தமிழ் பட முதல் பார்வை வெளியீடு....

"
மலையாளத்தில் வெளியான "பிரேமம்" படத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. இதைத் தொடர்ந்து "ஃபிடா" என்ற தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி, தமிழ் திரைப்படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்தது.
இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் தமிழில் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்கு கரு என்று பெயரிட்டுள்ளனர்.இதனை லைக்க நிறுவனம் தயாரிக்கிறது.
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. அதனை நடிகர் பிரபுதேவா தனது டிவிட்டர் சமூகவலைத்தளம் மூலம் வெளியிட்டார்.
சாய் பல்லவி நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். "கரு" படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.