Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சாத்தூரில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலை வெடித்து சிதறியது !

On August 1, 2017
min
Share
min சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாத்தூரை அடுத்த பல்வார்பட்டியில் செயல்படும் தனியார் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியது. இதில் பலத்த சத்தத்துடன் பட்டாசு ஆலையின் ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதைத்தொடர்ந்து அந்த அறையும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதேபோல் சிவகங்கை மாவட்ட காரைக்குடி பாகனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.