Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சலூன் கடைக்குச் செல்ல ஆதார்..

On June 2, 2020
frgfr
Share

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தான் சலூன் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டு செல்வது அவசியம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அங்கு வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களைப் பதிவேட்டில் குறித்துக்கொள்ள வேண்டும் என்றும் அழகு நிலைய உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செய்யப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.