சர்வானந்த் ஜோடியாகும் காஜல் !

கடைசியாக மெர்சல் தமிழ்ப் படம் . இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர், அதற்கு முன் 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளியாகின. தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் காஜல். ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த 'குயின்' படத்தின் ரீமேக் இது. இதில், வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் காஜல். இந்நிலையில், சர்வானந்த் ஜோடியாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் . இந்தப் படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். அடுத்த மாதம் 15ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் காஜல்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
