Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சமூக பிரச்சனையை சொல்லும் படம் மீண்டும்

On February 15, 2021
Kadhiravan Stills
Share

'ஹீரோ சினிமாஸ்' சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ள படம் தான் "மீண்டும்"

கதிரவன் கதாநாயகனாக நடிக்க, ஷரவணன் இயக்கத்தில் சமூக பிரச்சனையை சொல்லும் படம் "மீண்டும்". ஷரவணன் சுப்பையா இப்படத்தை இயக்கி உள்ளார். இவர் "சிட்டிசன்"
மற்றும் "ஏ.பி.சி.டி."ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்கி உள்ளார். அனேகா நாயகியாக நடித்துள்ளார்.

படத்தை பற்றி அவர் கூறியதாவது,

"மீண்டும்" ஒரு சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடி போகும் ஹீரோவுக்கு குடும்பம், உறவு, வாழ்க்கை என்று வெவ்வேறு கோணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகிறது. இவைகளிலிருந்து ஹீரோ 'மீண்டும்' தன் சகஜ நிலைக்கு வந்தாரா இல்லையா? என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்சன் என்று சரியான விகிதத்தில் கலந்து சொல்லும் படம் தான் "மீண்டும்" .

'மீண்டும்' திரைப்படம் மார்ச் மாதம் உங்கள் கண்களுக்கு விருந்தாக தியேட்டரில் வெளிவரும்" என்று கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.