Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் - 'ரங்கா'..!

On October 8, 2018
ரங்கா
Share
சிபிராஜ் தனது சிறப்பான கதை தேர்வால் வெற்றிகரமாக தனது எல்லைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வருகிறார். அடுத்து வெளிவர இருக்கும் அவரின் 'ரங்கா' படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே ஏதோ புதிதாக ஒரு விஷயம் படத்தில் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சமூகப் பிரச்சினையின் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதால் மொத்த குழுவில் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
"வழக்கமாக, தயாரிப்பாளர்கள் படத்தின் வெற்றிக்கு பிறகு நன்றி அறிவிப்பு செய்வார்கள். ஆனால் நான் இது தான் நன்றி சொல்ல சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் உழைப்பும், ஒத்துழைப்பும், ஆதரவும் முழுப்படத்துக்கும் இருந்தது. குறிப்பாக, காஷ்மீரின் கடும் குளிரில், மிகவும் அசாதாரணமான சூழலில் சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் நடித்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது.
அந்த மாதிரியான சிக்கலான இடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது. சிபிராஜ், நிகிலா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை பார்த்தபோதே, உற்சாகம் தொற்றிக் கொண்டது. படத்தின் இறுதி வடிவத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.
இயக்குனர் வினோத் டி.எல் பற்றி அவர் கூறும்போது, "அவர் தனது கருத்தை தெரிவித்த விதமும், ரங்கா தலைப்பின் முக்கியத்துவத்தை சொன்னதும் என்னை மிகவும் கவர்ந்தது. 'காக்கும் கடவுள் ரங்கநாதன்' என்பதன் தொடர்பு தான் 'ரங்கா' என்ற தலைப்பு. சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தது என்னை போன்ற ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த வரம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.
சிபிராஜ், நிகிலா விமல், ஆகியோருடன் சதீஷ், ரேணுகா, லொள்ளு சபா ஸ்வாமி நாதன், ஜீவா ரவி, சுஜாதா பாபு,ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். BOSS மூவீஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரித்திருக்கிறார். ராம்ஜுவன் (இசை), அர்வி (ஒளிப்பதிவு), அருண் ஷங்கர் துரை (கலை), திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), சத்யா என்.ஜே. (ஆடை வடிவமைப்பு), ட்யூனி ஜான் 24AM (டிசைன்ஸ்), விஜி-தஸ்தா (நடன அமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.