சட்டசபைத் தேர்தல்- வாக்கு எண்ணிக்கை துவங்கியது!

2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பின், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், பெரும்பாலானவற்றில், காங்., தோல்வியை தழுவி வருகிறது.
இந்நிலையில், காங்., ஆட்சியில் உள்ள, ஹிமாச்சலப் பிரதேசத்திலும், பா.ஜ., ஆட்சியில் உள்ள குஜராத்திலும், சமீபத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன.
இவற்றில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதல்கட்டமாக இரு மாநிலங்களிலும் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
