Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சப்தம் அதிகமாக உள்ளது என்று கேட்டதற்காக இப்படியா!

On April 20, 2025
WhatsApp Image 2025-04-19 at 22.46.35
Share

அம்பாஜோகாய் அருகே உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் ஞானேஷ்வரி அஞ்சன் என்ற இளம்பெண் அங்குள்ள கோவிலில் இருந்து வரும் ஓசையால் அவதிப்பட்டு போலீசில் புகார் அளித்ததற்காக, கிராம சபையின் சற்பஞ்ச் மற்றும் அவரது கூட்டத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து ஞானேஷ்வரி கூறும்போது, "கோவிலில் இருந்து வரும் மிகுந்த ஒலி காரணமாக நான் தலைவலியில் மிகவும் பாதிக்கப்படுகிறேன். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததும், சற்பஞ்ச் என்மீது பழிவாங்கும் நோக்கத்தில் என் வீட்டருகே மூன்று மாவு அரைக்கும் இயந்திரங்களை நிறுவினார். இதனால் என் உடல்நிலை மேலும் மோசமானது. நான் நேரில் சென்று விசாரித்தபோது, அவர் மற்றும் அவரது கூட்டத்தினர் பைப் கொண்டு என்மீது தாக்குதல் நடத்தினர்" என தெரிவித்தார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சர்ப்பஞ்ச் நிர்வாக அதிகாரியை கைது செய்யுமாறு கன்னடங்களும் வலுத்துள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.