Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சபரிமலை விவகாரம் : பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது - தமிழிசை செளந்திரராஜன்..!

On October 20, 2018
Tamilisai-2
Share
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், ஒருசில போராட்டக்காரர்கள் பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். நேற்று இரண்டு பெண்களை சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்ப கேரள அரசும், தேவசம் போர்டும் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது: பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது.உச்சநீதி மன்றம் தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டும் சமூக சம்பிரதாயங்களை புரிந்து கொள்ளும் நிலையில் நீதிமன்றங்கள் இல்லை. ஆசிரியர் குருமூர்த்தி அவர்களின் கருத்து சரியான கருத்து . முன்னதாக இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குருமூர்த்தி கூறியதாவது: . சமூக ஆர்வலர் போன்ற பெண்கள்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். இவ்வாறு நடந்து கொள்வது, நிஜமான பக்தர்களை அவமானப்படுத்தும் போக்கு. சமூகத்தையும், சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்ளும் நீதிமன்றங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.