Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சச்சினை பாராட்டிய பிரதமர் மோடி!

On September 27, 2017
sach1
Share
sach1 ஆதரவு... ஆதரவு... என்று களத்தில் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக மன்கி பாத் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வலியுறுத்தி வருகிறார். இத்திட்டத்திற்கு பல்வேறு தலைவர்கள் நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் இருவரும் மும்பையின் பந்த்ரா பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். சச்சினின் மகன் அர்ஜூனும் தூய்மைப்பணியில் ஈடுபட்டார். இந்த பணிக்கு முன்னதாக டுவிட்டர் பக்கத்தில் சச்சின் கூறியுள்ளதாவது: இந்தியா தூய்மையாக வைத்திருப்பதற்கு அனைவரும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும். நண்பர்களை தேர்ந்தெடுங்கள். தெருவை தேர்ந்தெடுங்கள். இணைந்து இந்தியாவை தூய்மைபடுத்துவோம் என்று தெரிவித்து இருந்தார். Narendra_Modi_Reuters2 சச்சினின் பணிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில் தூய்மை பணியில், அர்ஜூன் உள்ளிட்ட இளைஞர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தூய்மை பணியில் சச்சினின் உறுதியானது பாராட்டத்தக்கது. தூய்மை பணியில் ஈடுபட்ட ஆதித்யா தாக்கரேவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.