Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சசிகலாவுக்கு பரோல் உறுதி!? பெங்களூரு புறப்படுகிறார் தினகரன்!!

On October 5, 2017
VK Sasikala pays tribute to J Jayalalithaa
Share
[caption id="attachment_32758" align="aligncenter" width="640"]Chennai: AIADMK General Secretary VK Sasikala before leaving for meeting with Governor CH Vidyasagar Rao at former Chief Minister J Jayalalithaa',s memorial in Chennai on Thursday. PTI Photo by R Senthil Kumar(PTI2_9_2017_000299A) Chennai: AIADMK General Secretary VK Sasikala before leaving for meeting with Governor CH Vidyasagar Rao at former Chief Minister J Jayalalithaa's memorial in Chennai on Thursday. PTI Photo by R Senthil Kumar(PTI2_9_2017_000299A)[/caption] சசிகலாவுக்கு பரோல் கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இன்று பெங்களூர் புறப்படுகிறார்! dinakaran கடந்த சில நாட்களுக்கு முன்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்தன! மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக, சிறையில் இருக்கும் சசிகலா பரோலுக்காக சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தார். அதில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு பரோல் கேட்டிருந்தார். இதைதொடர்ந்து மனுவில் குறைபாடுகள் இருப்பதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் கூடுதல் ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரங்களுடன் மீண்டும் பரோல் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டபின், அந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் இன்று அல்லது நாளை பரோல் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.