சங்ககிரி அருகே சூட்கேசில் சடலமாக கிடந்த பெண்ணின் வயது 18: போலீஸாரின் துப்பு துலங்கியது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுண்டம் மேட்டுக்கடை பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி மதியம், இந்த மண்டபம் அருகே உள்ள இணைப்பு சாலையில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் முட்புதர்களில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இது மிகவும் துர்நாற்றம் அடித்ததால்
அந்த வழியாக சென்றவர்கள் வைகுண்டம் விஏஓ ஜெயக்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சங்ககிரி டிஎஸ்பி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துர்நாற்றம் வீசிய சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் ஒரு பெட்ஷீட் போர்த்தப்பட்டு, கை, கால்களை மடக்கி சுருங்கிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடந்தது. பெண்ணின் உடலை பார்த்த போலீசார், அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
அந்த பெண் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்ணாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினர். சேலம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி போலீசார் கூறும்போது, "சூட்கேஸில் இறந்து கிடந்த பெண்ணுக்கு வயது 18. அந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்கள் உள்ளன. உடலை போர்த்த பயன்படுத்திய போர்வை லாட்ஜில் எடுக்கப்பட்ட பெட்ஜீட் என கண்டுபிடிக்கப்பட்டது. பெண் நிர்வாணமாக இருந்ததால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இளம்பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் USA (USA) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனை நிலையம் பெங்களூரு உட்பட நான்கு இடங்களில் இருப்பதும் தெரியவந்துள்ளது. புதிய சூட்கேஸ் என்பதால் ஷோரூம்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் தங்கும் விடுதிகளில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் USA (USA) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனை நிலையம் பெங்களூரு உட்பட நான்கு இடங்களில் இருப்பதும் தெரியவந்துள்ளது. புதிய சூட்கேஸ் என்பதால் ஷோரூம்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் தங்கும் விடுதிகளில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
