Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கோவை அணியில் சதம் விளாசிய ரோகித்

On August 17, 2017
rokith
Share
rokith தமிழ் நாடு பிரீமியர் லீக் போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய காரைக்குடி அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. ஸ்ரீகாந்த் அனிருத் 36 பந்தில் 79 ரன்களும், ஆதித்யா 31, பத்ரிநாத் 42, சாஜஹான் 25 ரன்களும் எடுத்தனர். வெற்றி பெற்று விடலாமென்று களமிறங்கிய கோவை கிங்க்ஸ் அணியில் ரவிக்குமார் ரோகித்தின் அதிரடி சதம் பேரடியாக இருந்தது. கோவை சார்பாக முரளி விஜய் 27 பந்தில் 34 ரன்களும், ரோகித் 46 பந்தில் 102 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களே எடுத்திருந்த நிலையில் ரோகித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். இதில் கோவை அணி 19 ஓவருக்கு 194 ரன்களை குவித்து இறுதி போட்டியில் தகுதி பெரும் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கான தகுதிபோட்டியில் சென்னை சேப்பாக்கம் அணியுடன் கோவை கிங்க்ஸ் அணி மோதவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.