Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மனநலம் பாதித்து சூளை கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர் ...

On June 23, 2017
pallu
Share
pallu 2004 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் தான் காதல். இப்படம் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். இப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இப்படத்தில் ஒரு சிறிய ரோல் ஒன்றில் விரூச்சக காந்த் எனும் பெயரில் அறிமுகமான நடிகர் தான் நம் பல்லு பாபு, இவர் இப்படத்தில் விரூச்சக காந்த் என்ற பெயரில் வந்த பல்லு பாபுவிற்கு இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் இருவரும் இறந்துவிட்டார்கள். உடன் பிறந்தவர்களும் அவரை தனியே ஒதுக்கிவிட்டனர். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். pallu babu இவர் தற்போது சென்னையில் எழும்பூரில் உள்ள சூளை பகுதியில் ஒரு அங்காளம்மன் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். இவரை நேரில் சென்று பார்த்த எமது பத்திரிக்கையாளர் மூலம் இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல்லு பாபு அவர்கள் அந்த கோவலில் கொடக்கும் உணவை வங்கி சாப்பிடுவதகவும் அவர் மனநலம் பாதித்தவர் போல் பேசுவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் எமது பத்திரிக்கையாளரும் கூறுகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.