'கோலியை விட ரகானே தான் பெஸ்ட்’, ஆஸ்' கேப்டன் ஸ்மித்!..

தரம்சாலா-வில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தமது கருத்தை கூறியுள்ளார்.‘களத்தில் செயல்படும் விதத்தில் கோலியை விட ரகானே தான் பெஸ்ட்’ என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.
இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, தரம்சாலாவில் நடக்கிறது. இப்போட்டி துவங்கும் முன் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது வழக்கமான வார்த்தை விளையாட்டை துவங்கிவிட்டனர்.
என்னைப்பொறுத்தவரையில், இந்திய கேப்டன் கோலியை விட ரகானே எல்லா விதத்திலும் சிறந்தவர். விராட் இல்லாத போதும் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தினார். குறிப்பாக கோலியைவிட ரொம்ப கூலானவர் ரகானே,’என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தமது கருத்தை கூறியுள்ளார்...Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
