Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கேங்க்ஸ்டராக மாறும் பிரபல நடிகர்

On October 20, 2020
Urumeen Audio Launch
Share

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி நாயகனாக ஜெயித்தவர்கள் பலர். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர், இப்படத்தை இயக்கவுள்ளார்.
இவர் இயக்குநர் K.ராஜேஷ்வரின் மகன். 'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோர கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி', மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் K.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், 'நியாய தராசு', 'அமரன்', 'துரைமுகம்', 'அதே மனிதன்', 'இந்திர விழா' மற்றும் பல படங்களையும் K.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

"கேங்க்ஸ்டர்" படத்திற்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா.

பாபி சிம்ஹா - விக்ரம் ராஜேஷ்வர் இணையும் "கேங்க்ஸ்டர்" படத்துக்கும் K.ராஜேஷ்வர் தான் கதை திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இதன் மூலமே படத்தின் வெற்றி உறுதியாகிறது. தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.