Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குற்றம் 23 - விமர்சனம்

On March 3, 2017
Arun-Vijay
Share
Arun-Vijay குற்றம் 23 கதை - ராஜேஷ்குமார் திரைக்கதை இயக்கம்- அறிவழகன் அருண் விஜய், மிகிமா இசை - விஷால் சந்திர சேகர் ஒளிப்பதிவு - பாஸ்கரன் "ஈரம்" படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த இரண்டு படங்களில் தடுமாறிய இயக்குனர் அறிவழகன் குற்றம் 23 படத்தில் முழுப்பாய்ச்சலுடன் திரும்ப வந்திருக்கிறார். ஒரு திரில்லர் படத்திற்கான அத்தனை அம்சங்களும் கச்சிதமாக பொருந்தியுள்ளது இந்தப்படத்தில். ராஜேஷ்குமாரின் பல் கதைகள் திரப்படங்களாக கொத்துப்பரோட்ட போடப்பட்ட நிலையில் வரின் நாவலில் இருக்கும் வேகம் அப்படியே டைரக்டரின் புண்ணியத்தில் அட்டகாசமாக திரையில் மாறியிருக்கிறது. சினிமாவிற்கு எழுத்தாளர்களின் தேவை எந்த அளவு வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது படம். எப்போதும் போல் ஒரு கொலை வழக்கில் ஆரம்பிக்கும் திரைப்படம் இறுதி வரை எந்த இடத்திலும் வேகம் குறையாமல் எந்த தடுமாற்றமும் இல்லாமல் பயணிக்கிறது. மர்ய்த்துவத்தின் பின்னனியில் நடக்கும் நில தகிடுதத்தங்களை தோலுரிக்கும் படம் ஜெட் வேகத்தில் இருக்கிறது. அருண் விஜய்க்கு இது மிகப்பெரிய வாசல். பல வருடங்களாக வெற்றிக்கு போராடிய அவர் இந்தப்படத்தில் கஜினி முகம்மதுவாய் மாறி வெற்றியை ருசித்திருக்கிறார். ஒரு போலிஸ் ஆபிஸராக உடல்மொழியிலும் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். தன் கதாப்பாத்திரத்தின் தன்மையை அறிந்து அதைப் படத்தில் அடடகாசமாக கொண்டு வந்துள்ளார். ஹிரோயின் மகிமா வெத்து வேட்டாக இல்லாமல் கதையின் முக்கிய பங்காக மாறி படம் முழுதும் வருகிறார். தம்பி ராமையா மிக சீரியஸாக படு வேகமாக போய்க்கொண்டிருக்கும் படத்தில் பல இடங்களில் சிரிப்பு மூட்டி ரசிகர்களை இலகுவாக்குகிறார். அபினயா வெகு முக்கியப் பாத்திரத்தில் மனதை பாரமாக்கி போகிறார். படத்தின் பிரமாண்டத்தை ஒரு தனித்த கல்ர் டோனுடன் மிகப்பிரமாண்டமாக கட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். படத்தின் இசை தடதடக்கும் திரைக்கதைக்கு மேலும் வேகம் கூட்டியுள்ளது. கடைசிக்கட்டட்தில் வில்லன்களை காட்டி , அவர்களின் பின்னனியை முழுமையாக காட்டாமல் சட்டென்று முடித்தது , இருவில்லன்கள் தவிர மேலும் இருவரை இறுதியில் காட்டாமலே விட்டது என மிகச்சில இடங்களே நெருடல். அதைத் தவிர படத்தின் ஒவ்வொரு ப்ஃரேமையும் வெகு கவனமாக செதுக்கி தன் முழு வீரியத்துடன் உழைத்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். இந்த ஆண்டின் வெற்றி படங்களின் லிஸ்டில் பெருமையாக சொல்லும்படி வந்தமத்ந்திருக்கிறது "குற்றம் 23".

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.