Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குயீன்' தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்...

On June 7, 2017
kaajal
Share
kaajal பிரபல பாலிவுட்டில் இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான 'குயீன்' திரைப்படம் மெகாஹிட்டானது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் கைப்பற்றினார். இப்படத்தை நடிகை ரேவதி இயக்குவதாகவும், நடிகை சுஹாசினி வசனம் எழுத்துவதாகவும் தகவல் வெளியானது.இதனிடையே, சமீபத்தில் இப்படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், தமன்னா திரைப்படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். தற்போது 'குயீன்' தமிழ் ரீமேக்கில தமன்னாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 'விவேகம்', 'விஜய் 61' ஆகிய திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் 'குயீன்' தமிழ் ரீமேக்கிற்கு சம்மதம் கூறியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு முக்கித்துவம் வாய்ந்த 'குயீன்' ராணி கதாப்பாத்திரம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.