Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குத்துச் சண்டையில் இந்தியா வென்ற பதக்கம்! திருப்பிக் கொடுப்பதால் சீனாவின் கோபம் தணியுமா?

On August 7, 2017
vijendar_2581777f
Share
vijendar_2581777f மும்பையில் நடைபெற்ற ஆசிய பசிபிக் போட்டியில் சீன வீரர் ஜூல்பிகர் மைமைடியாவை இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர் சிங் வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜேந்தர் சிங் இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவுவதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டதாக கூறினார். எல்லையில் பதற்றம் நிலவுவது சரியல்லை என்று கூறிய விஜேந்திர சிங் இருநாட்டு நட்புணர்வு மற்றும் மக்களுக்காக தாம் வென்ற பதக்கத்தை சீனாவுக்கு விட்டு கொடுக்க தயார் என்று தெரிவித்தார். இந்த தொழில்முறை குத்துச்சண்டைக்குள் நுழைந்த பிறகு விஜேந்தர் சிங் தோல்வியை சந்திக்கவில்லை. சீன வீரர் ஜூல்பிகரிடம் இருந்த ஒரியன்டல் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தையும் தட்டி பறித்ததன் மூலம் அவர் தொடர்ச்சியாக 9-வது வெற்றியை சுவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.